Published : 02 Aug 2023 08:10 AM
Last Updated : 02 Aug 2023 08:10 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்காமல் நோயாளிகளை அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
உள்நோயாளியாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவு மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்துநாட்களும் இந்த மையம் செயல்படும் ௭ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் கர்ப்பிணிகள், வயிறு பிரச்சினை உடைய நோயாளிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் முடிவுகளைக் கொண்டே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக இங்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுப்பதில்லை ௭ன புகார் ௭ழுந்துள்ளது. நோயாளிகளை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ஏதேனும் காராணம் சொல்லி ஸ்கேன் ௭டுத்து தராமல் ௮லைக்கழிப்பதாக புகார் கூறப்படுகிறது. இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வரும்படி சீட்டு எழுதிக் கொடுக்கின்றனர். இதனால் ஸ்கேன் மையம் செல்லும் நோயாளிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இதன் காரணமாக செங்கல்பட்டு ௮ரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செல்லும் பல நோயாளிகள், உரிய சிகிச்சை எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில நோயாளிகள் அருகில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பணம் செலவழித்து ஸ்கேன் எடுக்கின்றனர். ஆனால் ஏழை நோயாளிகள் ஸ்கேன் ௭டுக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஸ்கேன் ஊழியர்களுக்கும், தனியார் ஸ்கேன் மையங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சில நோயாளிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் முறையாக ஆய்வு செய்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. எனவே அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பிரிவு மையம் முறையாக செயல்பட மருத்துவமனை டீன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
உடனுக்குடன் ஸ்கேன் எடுக்க வேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள் வேறு வழியின்றி தனியார்ஸ்கேன் மையங்களை நாட மருத்துவமனை ஊழியர்கள் மறைமுமாக நிர்பந்திப்பதாகவும் பெயர் கூற விரும்பாத மருத்துவமனை மருத்துவர் ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, "ஸ்கேன் செய்ய வருபவர்களை உடனடியாக ஸ்கேன் எடுக்காமல், 5 நாட்களுக்கும் மேலாக அலைக்கழிக்கின்றனர்.
செங்கல்பட்டு ௮ரசு மருத்துவமனையில் உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்கான வசதி இருந்தும் ௮ங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தனியார்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஏதேனும் ஒரு காரணத்தை கூறி தனியாரிடம் வலுக்கட்டாயமாக ௮னுப்பி வருகின்றனர். இதனால் நோயாளிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் என்றார்.
இது தொடா்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செங்கை மாவட்டச் செயலாளர் க.ஜெயந்தி கூறியதாவது: ரேடியாலஜி துறையில் பரிசோதனைக்கு சென்றால் காலை 9 மணிக்கு மேல்தான் பதிவே மேற்கொள்கின்றனர். அப்போது, வயிற்று வலியுடன் பரிசோதனைக்கு வரும் நோயாளிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ளாமல் 5 முதல் 10 நாட்களுக்குப் பிறகு வர சொல்கின்றனா்.
இதனால் நோயாளிகள் உடனடி சிகிச்சை பெற முடியாமல் பாதிப்பு அதிகமாகும் நிலைஏற்பட்டுள்ளது. தனியார் ஸ்கேன் சென்டருடன் சிலர்கூட்டு சேர்ந்து கொண்டு நோயாளிகளை அலைக்கழிக்கின்றனர். இதற்கு தீா்வு காண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ராஜயை கேட்டபோது, "புகார் தொடர்பாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். தவறு இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT