Published : 31 Jul 2023 05:43 AM
Last Updated : 31 Jul 2023 05:43 AM
சென்னை: தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தேனி தொகுதியை சேர்ந்த பி.மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், "வேட்பு மனுவில் வருமானம் உள்ளிட்ட உண்மை விவரங்களை ஓ.பி.ரவீந்திரநாத்குமார் மறைத்தார். எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம். அதனால் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும்" என கூறியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், "தனது வருமானத்தில் பல்வேறு தகவல்களை ஓ.பி.ரவீந்திரநாத் மறைத்துள்ளார். மேலும்,ரூ.4 கோடியே 16 லட்சம் அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ரூ.1 கோடியே 35 லட்சத்தை மட்டுமே வேட்பு மனுவில் காட்டியுள்ளார். சொத்து, கடன், பொறுப்பு, வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் வேட்புமனுவை ஏற்றது முறையற்றது. அதனால் மிலானி தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை ஏற்றுக்கொண்டு, ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பெற்ற வெற்றி செல்லாது" என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT