Published : 29 Jul 2023 05:36 PM
Last Updated : 29 Jul 2023 05:36 PM
புதுடெல்லி: கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட கோர விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோன சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதனிடையே, கிருஷ்ணகிரி பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன் முழு விவரம்: கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: 9 பேர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT