Published : 26 Jul 2023 05:52 AM
Last Updated : 26 Jul 2023 05:52 AM

மீனவர்கள் கைதை கண்டித்து ஆக.18-ல் ராமநாதபுரத்தில் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆக.18.ம் தேதி நடைபெறும் மீனவர் சங்கங்களின் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது, தாக்கப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், அதனை தடுத்திடக் கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ம் தேதி மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது.

முதல்வர் பங்கேற்பு: இம்மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதை ஏற்று, மாநாட்டில் பங்கேற்க முதல்வர் இசைவு தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x