Published : 05 Jul 2014 10:46 AM
Last Updated : 05 Jul 2014 10:46 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த 38 உடல்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றம்

கட்டிட விபத்தில் இடிபாடு களில் சிக்கி உயிருடன் மீட்கப் பட்டவர்கள் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் பலியானவர்களின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கு அந்த உடல்கள், உறவினர்களால் அடை யாளம் காணப்பட்டு, பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள் ளப்படுகின்றன. அதன் பின்பு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

இதுவரை, இடிபாடுகளில் சிக்கிய 54 நபர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதவிர, தனியாக கையும், வேறொருவரின் தொடையும் வந்துள்ளன. இதில் 52 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

ராயப்பேட்டை மருத்துவ மனையின் பிணவறையில் மொத்தம் 60 உடல்களை மட்டுமே வைப்பதற்கு இடம் உள்ளது. எனவே, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களை வைப்பதற்கு அங்கு போதிய இடம் இல்லை. இதனால் சில உடல்களை பிணவறையின் பிற பகுதியில் போட்டு வைத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிண வறையில் ஏற்கெனவே இருந்த 38 உடல்களில் 28 உடல்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பிணவறைக்கும், 10 உடல்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x