Published : 24 Jul 2023 05:23 AM
Last Updated : 24 Jul 2023 05:23 AM
சென்னை: பழைய நடைமுறையில் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை பெற்று வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி (இணை இயக்குநர்) வெ.ஜெயக்குமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு இலவச பேருந்து பயண அட்டை வழங்க ஏதுவாக அதன்விவரங்களை
டிஎன்-ஸ்கூல்ஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி நடப்பாண்டும் பழைய நடைமுறையை (Off Line) பின்பற்றலாம் என்று தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2023-24-ம் கல்வி ஆண்டில் இலவச பேருந்து பயண அட்டை பெற விரும்பும் மாணவர்களிடம் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பெற்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்துக்கு உட்பட்ட மண்டல போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உடனே சமர்ப்பிக்க வேண்டும். அதன் விவர அறிக்கையை தொகுத்து இயக்குநரகத்துக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT