Published : 22 Jul 2014 12:20 PM
Last Updated : 22 Jul 2014 12:20 PM
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
இன்று அதிகாலை, தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, 6 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறை பிடித்துச் சென்றனர்.
சர்வதேச கடல் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக தமிழக மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து 9 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்யதுள்ளனர்.
இது குறித்து, கியூ பிரிவு ஆய்வாளர் கென்னடியும், மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜாவும் கூறுகையில், 20 மீனவர்களும் அவர்களது 4 படகுகளும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, எஞ்சிய 18 மீனவர்களும் அவர்களது 5 படகுகளும் யாழ்ப்பானத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT