Published : 16 Nov 2017 09:41 AM
Last Updated : 16 Nov 2017 09:41 AM
பீட்டா அமைப்பினர் தொடர்ந்துள்ள வழக்கால் தமிழ்நாட்டில் தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை குறித்து தனி கவனம் செலுத்து மாறு தமிழக முதல்வர், துணை முதல்வரிடம் ஜல்லிக்கட்டு அமைப்பினர் வலியுறுத்தியுள்ள னர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமானதாக விளங்குகிறது. இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி 2008-ம் ஆண்டு விலங்குகள் நல வாரி யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் அடிப்படை யில் ஜல்லிக்கட்டுக்கு இடைக் கால தடை விதித்து உச்ச நீதிமன் றம் தீர்ப்பளித்தது. இதற்கு எதி ராக தமிழ்நாட்டில் போராட் டம் வெடித்தது.
இதையடுத்து, கடந்த 2009-ம் ஆண்டு மாநில அரசால், ‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குபடுத்தும் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்யப்பட்டது. ஆனால், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தை நாடின. நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்துவ தில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்தன.
மாணவர்களின் எழுச்சியால்..
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ்நாடு முழுவதும் நடத்திய தன்னெழுச்சிப் போராட்டத்தின் விளைவாக, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வந்தது. அதன்பிறகு தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப் பட்டது.
இந்நிலையில், “உலக சுகா தார அமைப்பு அறிவித்துள்ள விலங்குகளுக்கான 5 அடிப்படை உரிமைகளை மீறுவதாக தமிழக அரசின் சட்டம் அமைந்துள்ளது. இச்சட்டம் நிறைவேற் றிய பிறகு நடந்த ஜல்லிக்கட்டுகளில் 5 காளைகள் இறந்துள்ளன. 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்பட்டதற்கான போட்டோ, வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளோம். எனவே, தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு சார்பில் மீண்டும் மனுதாக்கல் செய்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டனர்.
பீட்டா வழக்கால் அச்சம்
பீட்டா அமைப்பின் இந்த வழக்கு காரணமாக, வரும் ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தடையின்றி ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா என்ற குழப்பமும், அச்சமும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வழக்கில் ஆரம்ப நிலையில் இருந்தே திறம்படச் செயல்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு எவ்வகையிலும் தடை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தினர் அண்மையில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத் தலைவர் ராஜேஷ் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் பீட்டா அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதிதான், தற்போதைய வழக்கு.
இந்த வழக்கின் ஆரம்ப நிலையில் இருந்தே தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.
போராடிப் பெற்ற உரிமை
பீட்டா அமைப்பின் வழக்கு காரணமாக ஒவ்வொரு ஆண் டும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா என்ற குழப்பமும், இழுபறி நிலையும் ஏற்பட்டு வருகிறது.
மாநிலமே திரண்டு போராடி பெற்ற ஜல்லிக்கட்டு உரிமையை, கலாச்சாரத்தை மீண் டும் இழந்துவிடக் கூடாது. இவ்விஷயத்தில் முதல்வர், துணை முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். பீட்டாவின் முயற்சியை முறியடிக்க வேண் டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT