Published : 21 Jul 2023 01:38 PM
Last Updated : 21 Jul 2023 01:38 PM

“உங்கள் தலைமைத்துவம் பாராட்டுக்குரியது” - காங். தலைவர் கார்கேவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கோப்புப் படம்

சென்னை: கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்தக் கடினமான காலங்களில், மதச்சார்பற்ற கூட்டணிக்காக ஒருமித்த கருத்தைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் உங்கள் தலைமைத்துவம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

உங்கள் பரந்த அனுபவமும், நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் எங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறது. வலிமையான INDIA-வை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகள், நமது மகத்தான தேசத்தை வடிவமைத்த மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கான சிந்தனைகளுடன் நம்மை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லட்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x