Last Updated : 07 Nov, 2017 01:11 PM

 

Published : 07 Nov 2017 01:11 PM
Last Updated : 07 Nov 2017 01:11 PM

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்குறளுடன் தொடங்கும் போலீஸார் பணி

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜெயக்குமார் கடந்த மே மாதம் பொறுப்பெற்றார். அவர் பெறுப்பேற்றதில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேநேரம் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் புதிய வழிமுறைகளை கையாண்டு வருகிறார்.

இதில், தினமும் காலை 7 மணிக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து மைக்கில் அனைத்து போலீஸாரும் கேட்கும் வகையில் தூய தமிழில் காலை வணக்கம் சொல்லப்படும். பின்னர் அன்றைய நாளின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு திருக்குறளும், அதற்கான விளக்கத்தையும் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்து பிறந்த நாள் மற்றும் திருமண நாள் காணும் போலீஸாரின் பெயரை கூறி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதனை மைக், வாக்கிடாக்கி மூலம் கேட்கும் போலீஸார் உற்சாகத்துடன் அன்றைய பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாட உள்ள போலீஸாருக்கு ஒரு நாள் சிறப்பு விடுமுறை (பர்மிஷன்) வழங்கப்பட்டு இந்த நிகழ்வினை அவர்களது குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கையால் போலீஸார் பணிச்சுமை, மன உளைச்சலை மறந்து உற்சாகத்துடன் பணி செய்கின்றனர்.

இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமாரிடம் கேட்டபோது, “காவல்துறையினர் நலனில் அக்கறை கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம், மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

காலை எழுந்தவுடன் கேட்கப்படும் நற்சொல், வாழ்த்துக்கள் அன்றைய நாளை உற்சாகமாக எதிர்கொள்ள வைக்கும். இதற்காக இரு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்”.

மேலும் இதனை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று நம்மிடம் கேட்டபோது, போலீஸாரின் குழந்தைகள் உயர்கல்வி யில் செய்துள்ள சாதனைகளையும் சொல்லி ஊக்கப்படுத்தலாம் என்று கூறிவிட்டு விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x