Published : 18 Jul 2023 06:09 AM
Last Updated : 18 Jul 2023 06:09 AM

வில்லா கட்டுவதற்கு உரிய உதவி வழங்கும் புதிய திட்டம்: ஜி ஸ்கொயர் நிறுவனம் அறிமுகம்

சென்னை: தென்னிந்தியாவின் மிகப்பெரிய ப்ளாட் ப்ரோமோட்டர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான ஜி ஸ்கொயர், சொந்த மனையில் தங்களுடைய கனவு வில்லாக்களை உருவாக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவதற்கு வசதியாக ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் எனும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.

ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட் என்பது வழக்கமான ரியல் எஸ்டேட் சலுகைகளையும் தாண்டி மனை வாங்குவதற்கும் அதில் கட்டிடத் திட்ட அனுமதி பெறுவதிலிருந்து கிரஹப்பிரவேசம் வரை வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்கும் வகையில் செயலாற்றும். இதில் திறமையான கட்டிடக் கலைஞர்கள், கட்டுமான நிர்வாகக் குழுக்கள், பொறியாளர்கள் என பல நிபுணத்துவம் பெற்றவர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

மேலும் கட்டுமானத் துறையில் 65-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்டுகளுடன் விரிவான ஒத்துழைப்பு நெட்வொர்க் கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வில்லா திட்டங்களை சிறப்பான வகையில் செய்து முடிக்கும்.

உயர்தர கட்டுமானப் பொருட்களைப் பெறுவது, திறமையான கட்டிடக் கலைஞர்கள் மற்றும் பொறியாளர்களை பணியில் ஈடுபடுத்துவது அல்லது நம்பகமான ஒப்பந்தக்காரர்களுடன் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைப்பது, தேவையான இலவச ஒப்புதல்களை பெறுவது போன்ற அனைத்து பணிகளையும் துல்லியமாகவும், விரைவாகவும் செய்து தரும்.

இதுகுறித்து ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலராமஜெயம் கூறும்போது, "ஜி ஸ்கொயர் பில்ட் அசிஸ்ட்- ஐ அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த திட்டத்தை உருவாக்கும் செயல்முறையை வாடிக்கையாளர்களே மேற்கொள்ளலாம்.

நாங்கள் அவர்களுக்கு நிபுணர்களின் கருத்துகளை வழங்குவோம். பிராண்ட் அசோசியேஷன்களின் நெட்வொர்க் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் ரியல் எஸ்டேட் ஆலோசனை மற்றும் தரமான சேவையை வழங்குகிறோம்.

நிபுணத்துவம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களின் தனித்துவமான விருப்பத்தேர்வுகள், விவரக்குறிப்புகள் மற்றும் பட்ஜெட்டைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட கனவு இல்லத்தை உருவாக்கி தருகிறோம். சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மைசூர் மற்றும் பல்லாரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த சேவை வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x