Published : 16 Jul 2023 01:46 PM
Last Updated : 16 Jul 2023 01:46 PM

அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவ இடங்கள் எத்தனை?- தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக, மொத்தம் 40,200 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3994 அதிகம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2023-24 கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்காக, மொத்தம் 40,200 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 3994 அதிகம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

> அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6326 MBBS இடங்கள் உள்ளன.

> அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்த 1768 BDS இடங்கள் உள்ளன.

> 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் மொத்தம் 473 MBBS இடங்கள் உள்ளன.

> 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் மொத்தம் 133 MBBS இடங்கள் உள்ளன.

2023–24 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்:

  • அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 6326 MBBS இடங்கள் உள்ளன.
  • அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்த 1768 BDS இடங்கள் உள்ளன.
  • மாணவர்களிடம் இருந்து மொத்தம் 26,806 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • ஏற்றக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் 25,856. இதில், ஆண்கள் 9,680 பேர், பெண்கள் 16,176 பேர்.

2023–24 ஆம் ஆண்டிற்கான 7.5 % அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்:

  • 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லுரிகளில் மொத்தம் 473 MBBS இடங்கள் உள்ளன.
  • 7.5% ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் மொத்தம் 133 MBBS இடங்கள் உள்ளன.
  • மாணவர்களிடம் இருந்து மொத்தம் 3,042 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • ஏற்றக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் 2,993. இதில், ஆண்கள் 901 பேர், பெண்கள் 2,092 பேர்

2023–24 ஆம் ஆண்டிற்கான சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு (Management Quota) மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள்:

  • நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1509 MBBS இடங்கள் உள்ளன.
  • நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 395 BDS இடங்கள் உள்ளன.
  • மாணவர்களிடம் இருந்து மொத்தம் 13,394 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
  • ஏற்றக்கொள்ளப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் தகுதியுடையவர்கள் 13,179. இதில், ஆண்கள் 4,752 பேர், பெண்கள் 8,427 பேர்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கையின்போது, 6,217 MBBS மற்றும் 1580 BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,736 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதேபோல், 1,461 MBBS மற்றும் 540 BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,470 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

2021-2022 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவச் சேர்க்கையின்போது, 5,932 MBBS மற்றும் 1,460 BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,591விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதேபோல், 1,286 MBBS மற்றும் 570 BDS அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,981 விண்ணப்பங்கள் பெறப்பட்டன, என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x