Published : 27 Jul 2014 10:49 AM
Last Updated : 27 Jul 2014 10:49 AM
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் மேல் அங்கி அணிவது கட்டாயமல்ல என்று கூறியுள்ள இந்திய பார் கவுன்சிலின் கடிதத் துக்கு வழக்கறிஞர்கள் மத்தி யில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி யுள்ளது.
தமிழ்நாடு பெண் வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி இந்திய பார் கவுன்சில் தலைவருக்கு கடந்த ஜூன் 2-ம் தேதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயில் 40 டிகிரி செல்சியல் வரை பதிவாகிறது.
இந்தக் கடுமையான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் வழக்கறி ஞர்கள் கருப்பு கோட் மற்றும் மேல் அங்கி அணிந்து பணியாற்றுவது மிகவும் சிரமமாக உள்ளது.
கருப்பு கோட் மற்றும் மேல் அங்கி அணிந்திருப்பதால் உடலில் வெப்பமும், வியர்வையும் அதிகரித்து வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கோடை காலத்தில் டெல்லி நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு கோட் மற்றும் மேல் அங்கி அணிவதில் விதிவிலக்கு அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கோடை காலத் தில் அதிக வெப்பம் நிலவுவதால், தமிழ்நாட்டிலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கருப்பு கோட் மற்றும் மேல் அங்கி அணிந்து பணி யாற்றுவதில் இருந்து வழக்கறி ஞர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சாந்தகுமாரி தனது கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்தக் கடிதம் தொடர்பாக இந்திய பார் கவுன்சிலின் செயலாளர் ஜெ.ஆர்.சர்மா, ஜூலை 16-ம் தேதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் பார் கவுன்சில் விதிகளின்படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் ஆஜர் ஆகும்போது வழக்கறி ஞர்கள் மேல் அங்கி அணி வது அவர்களின் விருப்பத் துக்குட்பட்டது. அதேபோல் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தவிர பிற நீதிமன்றங்களில் கோடை காலத்தில் கருப்பு கோட் அணிவது கட்டாயமல்ல.
இந்த விதிமுறை குறித்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து வழக்கறி ஞர் சங்கங்களுக்கும் தெளிவு படுத்துமாறு தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அந்த பதில் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
வரவேற்பும் எதிர்ப்பும்
பார் கவுன்சிலின் இந்தக் கடிதம் வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.அருள்மொழி கூறும்போது, “இது நீண்ட காலமாக விவாதிக்கப் பட்டு வரும் விவகாரம். தற்போது நல்ல முடிவு வந்திருப்பது மகிழ்ச்சிக் குரியது. கீழ் நீதிமன்றங்களைப் போலவே உயர் நீதிமன்றங் கள், உச்ச நீதிமன்றத்திலும் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆனால், “வழக்கறிஞர்களுக் கான உடைக் கட்டுப்பாடு நீக்கப் படுவது நீதித் துறையின் மாண்பை யும், கண்ணியத்தையும் குறைத்து விடும்” என்கிறார் தமிழ் நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தின் தலைவர் எஸ்.பிரபா கரன். “வழக்கறிஞர்கள் கருப்பு கோட் அணிவதும், மேல் அங்கி அணிவதும் நீண்ட பாரம் பரியம் கொண்டது. அந்த பாரம் பரியத்துக்கு இழுக்கு ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதை அனுமதிக்கக் கூடாது” என்றார் பிரபாகரன்.
“ஆங்கிலேய காலனி ஆதிக்க கால மன நிலையிலிருந்து இந்திய நீதித் துறை விடுபடுவதற்கான ஒரு முக்கியமான மைல் கல் நடவடிக்கை என்றே இப்போதைய பார் கவுன்சில் கடிதத்தை கருதுகி றோம்” என்கிறார் இதற்கான முயற் சிகளை மேற்கொண்ட தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பின் தலைவர் கே.சாந்த குமாரி. “கடுமையான கோடை காலத்தில் மேல் அங்கி, கருப்பு கோட் அணிந்து வழக்கறி ஞர்கள் படும் பாடு கொஞ் சமல்ல. குறிப்பாக பெண் வழக்கறி ஞர்களின் அவதிகளை விவரிக்க இயலாது. இந்த சூழலில் இந்திய பார் கவுன்சில் செயலாளரின் கடிதத்தில் கூறியுள்ளவற்றை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங் களில் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
“கருப்பு கோட்டும், மேல் அங்கியும்தான் வழக்கறிஞர் களுக்கான அடையாளம். பாரம் பரியமிக்க அந்த அடையாளத்தை இழக்க முடியாது” என்கிறார் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ். “வெயிலும், வெப்பமும் பெரும் பிரச்சினை என்பதில் சந்தேகமில்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போல அனைத்து நீதிமன்றங்களிலும் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும்” என்கிறார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT