Published : 15 Jul 2023 06:33 AM
Last Updated : 15 Jul 2023 06:33 AM
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கரை, சிஐடியு-ன் கீழ்செயல்படும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் அ.சவுந்தரராசன் மற்றும் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் சென்னையில் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினர்.
அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைச்சர் அளித்த பதில்: அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் காலிப்பணி யிடங்களை பூர்த்தி செய்வதற்கான அரசாணை வெளியிடநடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவ தோடு, வாரிசு நியமனத்துக்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் படுகிறது.
ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு தொடர்பாக பல நிலைகளில் பேசி வருகிறோம். விரைவில் தீர்வு காணப்படும். ஊழியர்களுக்கான 14 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகைகுறித்த விவரத்தைப் போக்குவரத்துக் கழகங்களில் பெற்று,விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான பொதுவான நிலையாணை, பதவி உயர்வு, போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியதாக சிஐடியு சங்கத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT