சென்னை: "போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்" என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் செந்தில் பாலாஜி வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில், மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறை வாதத்துக்கு பதில் வாதத்துக்காக வழக்கை நீதிபதி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தார். வெள்ளிக்கிழமை விசாரிக்க ஆரம்பித்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டார். மதிய உணவு இடைவெளிக்குச் செல்லாமல், சுமார் 3 மணி நேரம் இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.
- பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை மீட்டு எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா எனபது குறித்து இரண்டு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர்.
- அமலாக்கத் துறையின் உரிமையை பறிக்க முடியாது.
- அமலாக்கத் துறையை காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது.
- அமலாக்கத் துறையினர் காவல்துறையினர் அல்ல என்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்துக்கு மாற்று கருத்து இல்லை.
- செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான்; கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது.விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
- கைது செய்யப்பட்டால் காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.
- தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும்.
- செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கிய பரத சக்கரவத்தி உத்தரவுதான் எனது உத்தரவும்.
> மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என்பதை பொருத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும்.
- செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
- 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டும் ஒரு நாள் கூட காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை.
- நீதிமன்ற காவல், நீதிமன்ற காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனித்தனி மனுக்கள் மீது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில்தான் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர்.
- காலை முதல் நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்கள் சேகரிப்பு, வாக்குமூலம் என அனைத்தும் நடைபெற்றபோது செந்தில் பாலாஜிக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
- கைது குறித்து செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூற முடியாது.
- இந்த ஆட்கொண்ர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
- இந்த தீர்ப்பை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
> செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவல் வைத்த பின்னர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் . நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்தபின் அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை
- செந்தில் பாலாஜி தற்போது நீதிம்னற காவலில் தான் உள்ளார். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் சில முறை ஆஜராகியுள்ளார். சில முறை ஆடிட்டர்க்ள் ஆஜராகியுள்ளனர்.
- அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை செந்தில் பாலாஜி எதிர்த்து வழக்கு தொடரவில்லை.
- கைது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல
- இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நிதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்கிறேன்
- ரிமாண்ட் செய்த பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.
செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருப்பதால், எப்போதிலிருந்து நீதிமன்ற காவல் நாட்களாக கருத வேண்டும் எனபதை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.
WRITE A COMMENT