Published : 08 Jul 2014 09:00 AM
Last Updated : 08 Jul 2014 09:00 AM
கச்சத்தீவு பிரச்சினையில் காங் கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட நிலையே தொடரும் என்று பா.ஜ.க. கூறுமானால் மற்ற பிரச்சினைகளிலும் காங்கிரஸை பா.ஜ.க. பின்பற்றுமா என்பதை விளக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியினர் இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர் களிடம் கூறியது:
பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் பெட்ரோல், டீசல் விலை மட்டுமின்றி ரயில் கட்டணமும் உயர்ந்துவிட்டது. கேஸ் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது. ஆக இந்த அரசு ஏழை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இல்லை. ரயில் கட்டண உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதால், கட்டண உயர்வு ரத்தாகும் என்று நம்புகிறேன். ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் ஆகியன மக்கள் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கருத்து.
பாஜக பின்பற்றுமா?
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு ஒரே தீர்வு கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதுதான். கச்சத்தீவு பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட நிலையே தொடரும் என்று பா.ஜ.க. கூறுமானால், மற்ற பிரச்சினைகளிலும் காங் கிரஸை பா.ஜ.க. பின்பற்றுமா என்பதை விளக்க வேண்டும். சென்னை கட்டிட விபத்து கவலை யளிக்கிறது. கட்டுமானப் பணி களை அரசு தீவிரமாக கண் காணிக்க வேண்டியது அவசியம் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் மீண்டும் தலையெடுத் துள்ளதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, கட்சி ஒரு தலைமையின் கீழ்தான் செயல் பட்டு வருகிறது.
அகில இந்திய அளவில் காங்கிரஸ் மாநில அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த அறிக்கையில் உண்மை நிலை வெளிவரும். அந்த அறிக்கை அடிப்படையில் மாநில காங்கிரஸ் அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT