Published : 11 Jul 2023 06:25 AM
Last Updated : 11 Jul 2023 06:25 AM
சென்னை: போக்குவரத்துத் துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.
இது தொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கி.நடராசன் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை(தொமுச) தலைமை அலுவலகத்தில், சங்கப் பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம்,போக்குவரத்துத் துறை அமைச்சர்சிவசங்கர் ஆகியோர் நாளை(ஜூலை 12) காலை 10 மணிக்குதொமுச மண்டல பொதுச்செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதில் போக்குவரத்துத் துறைசார்ந்த பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்படவுள்ளன. இக்கூட்டத்துக்கு அனைத்து மண்டலபோக்குவரத்து தொமுச பொதுச் செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் கூட்டத்துக்கு வரும்போது, அதிமுக ஆட்சியில் காவல் துறையால் தொடரப்பட்ட பொய் வழக்கு சம்பந்தமான விவரங்கள், காவல் துறை வழக்கை காரணம் காட்டி நிர்வாகம் தொடர்ந்த ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை, ஆய்வுப் பலன் தள்ளிவைக்கப்பட்ட விவரங்கள், பிரதமர் மோடியின் அரசை எதிர்த்து ஆட்சியில் செய்த வேலைநிறுத்த போராட்டங்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து, ஆவணங்களுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT