Published : 10 Jul 2023 04:13 AM
Last Updated : 10 Jul 2023 04:13 AM
காட்பாடி: காட்பாடியில் புதிதாக திறக் கப்பட்ட பிரியாணி கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று கூடியதால் பாதுகாப்பு கருதி கடையை மூட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி - வேலூர் சாலையில் புதிதாக பிரியாணி கடை நேற்று காலை திறக்கப்பட்டது. கடை திறப்பு விழாவையொட்டி முதல் நாளான நேற்று பிரியாணி வாங்க வருவோர்களுக்கு, ‘ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்’, அதே போல, ‘ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம்’ என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை கேட்டதும் அசைவ பிரியர்கள் நேற்று காலை 10 மணி முதல் கடை முன்பாக கூட தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்ததால் கடையை திறந்து முதல் விற்பனை தொடங்கியதும் கடை ஊழியர்கள், பிரியாணி வாங்க வந்தவர்களை வரிசையில் நின்று வரவும் என அறிவுறுத்தினர். அதன்படி கடையில் இருந்து நிற்க தொடங்கிய வரிசை அங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ., தொலைவுக்கு நீண்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாத பொதுமக்கள் வரிசையில் நின்று பிரியாணி வாங்க காத்திருந்தனர்.
உச்சி வெயிலையும் பொருட் படுத்தாமல் சுமார் 500-க்கும் மேற் பட்டோர் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந் தனர். இதனால் காட்பாடி - வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காட்பாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்து விட்டு அவ்வழியாக திரும்பி வந்தபோது, "கடும் வெயிலில் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு கூடியிருக்கிறது?" என விசாரிக்க உத்தரவிட்டார்.
பின்னர், பிரியாணி கடை திறப்பு என்பதால் தான் கட்டுக் கடங்காத கூட்டம் என்பதை அறிந்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆவேசமடைந்து கடை ஊழியர்களை அழைத்து, ‘‘ பொதுமக்களை ஏன் வெயிலில் நிற்க வைத்துள்ளீர்கள்?" என சரமாரியாக கேள்வி எழுப்பி யதோடு, பிரியாணி கடை இயங்க முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் கடையை திறந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரி யாணி கடையை மூட காவல் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கடை மூடப்பட்டு சீல் வைக்கப் பட்டது.
மேலும், அனுமதி பெறாமல் கடை திறந்தது குறித்து விளக்கம் அளிக்க மாநகராட்சி சார்பில் கடை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிரியாணி வாங்க வந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும் பிச்சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT