13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், "சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை செயலாளராக தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் ஐ.ஏ.எஸ்; பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை கூடுதல் செயலாளராக சிவஞானம் ஐ.ஏ.எஸ்; வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக கலையரசி ஐ.ஏ.எஸ்; நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழி ஐ.ஏ.எஸ், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மதுவிலக்குத் துறை மற்றும் உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி ஐஏஎஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா ஐஏஎஸ், சமூக நலத் துறை ஆணையராக அமுதவல்லி ஐஏஎஸ், தொழில்முனைவு வளர்ச்சி இயக்குநராக உமா சங்கர் ஐஏஎஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சித்துறை சிறப்புச் செயலாளராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை துணைச் செயலாளராக பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக சிம்ரஞ்சீத் சிங் கஹ்லோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in