Published : 08 Jul 2023 03:11 PM
Last Updated : 08 Jul 2023 03:11 PM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை பெறுவதற்கு வரும் ஜூலை 3-வது வாரம் முதல் சென்னையில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயலாக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை மாவட்டம், காவல் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்படி, ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்களை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆணையர் வழங்கிய அறிவுறுத்தல்கள்:
ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், உரிமம் ஆய்வாளர், சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார அலுவலர், தூய்மைப் பணி மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணி ஆய்வாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், உதவி சுகாதார அலுவலர்கள், உதவி கணக்கு அலுவலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் முழு விவரம் > ரூ.1,000 பெற தகுதியானவர்கள் யார்? - விதிமுறைகள் விவரம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT