Last Updated : 21 Apr, 2014 10:40 AM

 

Published : 21 Apr 2014 10:40 AM
Last Updated : 21 Apr 2014 10:40 AM

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தார் கலைஞர்: லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர் பேட்டி

இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண் டிருக்கும் சூழலில், திமுக-வுக்கு எதி ராக சங்கநாதம் எழுப்பி இருக்கிறார் லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர். அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

திமுக தேர்தல் பிரச்சாரத்துக்காக தானே உங்களை அழைத்தார் கருணாநிதி.. இடையில் என்ன நடந்தது?

திமுக-வில் உட்கட்சி பூசல் பூதாகரமாய் நிற்கிறது. ஒரு தலைவ ரோட பிள்ளை தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த வரே திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார். ஸ்டாலின் பிரச்சாரத்தை தவிர திமுக தரப்பில் மற்ற யாரு டைய பிரச்சாரத்தையும் தொலைக் காட்சியில் காட்டுவதில்லை. திமுக-வினருக்கே இந்த நிலை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?

டி.ராஜேந்தரை விட்டிருந்தால், எதிர் அணியில் அழைத்து எம்.பி. சீட் கொடுத்திருப்பார்கள் என்றும் மேடையில் ஏறி தலைமுடியை கோதியிருப்பார்… களத்தில் இறங்கி மோதியிருப்பார் என்றும் நினைத்திருப்பார்கள். அதற்கு பயந்துதான் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தார் கலைஞர். திமுக-வின் பிரச்சாரத்தை பலப்படுத்த என்னை அழைத்த அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிர். அது எல்லாமும் எனக்கு தெரியும். அதைப்பற்றி தற்போது விமர்சிக்க வேண்டாம்.

இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அதிமுக- வுக்கு ஆதரவாக இருந்திருப் பீர்களா?

இனிமேல், யார் கேட்பார்கள், அழைப்பார்கள் என்கிற கற்பனை கனவுகளை எல்லாம் வளர்த்துக் கொண்டு இருக்க போவதில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அதிமுக-விற்காக பிரச்சாரம் செய் தேன். காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி, புதுக்கோட்டை இடைத் தேர் தல்களில் முதல்வர் அழைத்ததால் பிரச்சாரம் செய்தேன். அதிமுக வெற்றி பெற்றது. அப்போதே எவ் வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவன். இப்போதா மாறப்போ கிறேன்?

பிரச்சார அலை ஓயும் இந்த நேரத் தில் திடீரென திமுக-வை எதிர்த்து அறிக்கை வெளியிடக் காரணம்?

’திமுக-வுக்கு ஆதரவான அலையை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது’ என்கிறார் கலை ஞர். அது என் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒருவேளை காலம் கனிந்து, எதிர் அணியில் நின்று நான் களமாடியிருந்தால் கலைஞரால் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க முடியுமா? அதனால்தான் நான் இப்போது பேச வேண்டி இருக்கிறது. விஜயகாந்த்துக்கு பின்னால் அலைந்த கலைஞர் ஏன் என்னை கூப்பிட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி.

ஸ்டாலின்தான் உங்களை புறம் தள்ளினாரா?

அவரை பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பொருட்டாக நினைக்கவும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னு டைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை. எத்தனை கலைஞர் என்னை கைவிட்டாலும், கடவுள் துணையோடு என் பயணத்தைத் தொடருவேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x