Published : 05 Jul 2023 05:58 AM
Last Updated : 05 Jul 2023 05:58 AM
மதுரை: "தக்காளி, வெங்காய் விலைவாசி உயர்வை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை" என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகளில் இதுவரை பொது சிவில் சட்டம் நடைமுறையில் இல்லை. தற்போது இருக்கும் சட்டத்தில் என்ன பிரச்சனை உள்ளது. குறிப்பாக இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு உரிய சட்ட முறையை தகர்க்க வேண்டும். புது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் ராணுவத்திற்கு சேரும்போது, நான் தாடியை எடுத்துக்கொண்டு சேர்வேன், சீக்கியர்களை தலப்பாகை, தாடியை எடுத்துவிட்டு சேர்க்க முடியுமா?
தக்காளி, வெங்காய் விலைவாசி உயர்வை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து எதிலும் அடிப்படை கட்டமைப்பு வசதியில்லை. ஆட்சிக்கு வந்தால் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என கூறினர். 10 ஆண்டில் எத்தனை கோடி பேருக்கு வேலை கொடுத்துள்ளனர்.
பொது சிவில் சட்டத்தால் பொருளாதாரம் உயருமா? நாடு வளர்ந்து விடுமா? பெண்களுக்கு சம உரிமை இல்லை. நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த் மரத்தடியில் அமர்ந்து யாகம் வளர்த்தார். முதல் குடிமகள் திரௌபதி முர்முவை கட்டையை போட்டு வெளியே நிறுத்தினர். சட்டத்திற்கு முன்பு சமம் இல்லை என்றபோதிலும், எதற்கு இச்சட்டம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தீர்ப்பில் இன்னொரு நீதிபதி இருந்திருந்தால் வேறு ஒரு தீர்ப்பு வந்திருக்கும். ஒரு வழக்கை எடுத்துக் கொண்டால் கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வரும். இதை பார்த்தால் குழம்பி விடுவோம். சட்டம் சமம் என்பதே இல்லை. அப்படியெனில் ஒரு வழக்குக்கு ஒரு தீர்ப்பு தான் இருக்கவேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT