Published : 01 Jul 2023 05:05 AM
Last Updated : 01 Jul 2023 05:05 AM
சென்னை: தமிழக உள்துறைச் செயலர் பி.அமுதா பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: பேட்டரி, எத்தனால், மெத்தனால் ஆகியவற்றில் இயங்கும் சுற்றுலா வாகனங்களுக்கு, தேசிய அளவில் சுற்றுலாவுக்கான உரிமம் கட்டணமின்றி வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேவையற்ற குழப்பங்கள்: இதை தமிழகத்தில் செயல்படுத்தும்போது தேவையற்ற குழப்பங்கள் மற்றும் கள அளவில் பிரச்சினைகள் ஏற்படும். எனவே,பேட்டரி, எத்தனால், மெத்தனாலில் இயங்கும் அனைத்துபோக்குவரத்து வாகனங்களுக்கும் (சரக்கு வாகனம் தவிர்த்து) கட்டணமின்றி உரிமம் வழங்குவதன் மூலம் தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கலாம் என் குறிப்பிட்டு, போக்குவரத்து ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, "பேட்டரி, மெத்தனால், எத்தனால் ஆகியவற்றின் மூலம்இயங்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு எவ்வித உரிமக் கட்டணமின்றி, உரிமம் வழங்கப்படும்" என ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT