Published : 07 Jul 2014 10:02 AM
Last Updated : 07 Jul 2014 10:02 AM

தமிழகத்தில் 300 அரசு கட்டிடங்களில் சூரியசக்தி மின் நிலையம்- ரூ.21 கோடி மதிப்பில் தலா 7 கிலோ வாட் பொருத்த திட்டம்

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அலுவலகங்கள் உள் ளிட்ட 300 அரசு கட்டிடங்களில், தலா 7 கிலோ வாட் மதிப்பிலான சூரிய சக்தி மின் நிலையங் கள் அமைக்கப்படவுள்ளன. இத் திட்டத்துக்கு தோராயமாக ரூ.21 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தை மின் மிகை மாநில மாக மாற்றும் வண்ணம், முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். புதிய அனல் மின் நிலையத் திட்டங் கள் உருவாக்கப்பட்டு, ஐந்தாண்டு களில் 7,000 மெகாவாட்டுக்கும் கூடுத லாக மின் உற்பத்தி செய்ய திட்ட மிட்டு பணிகள் நடைபெறுகின்றன.

சூரியசக்தி மின் கொள்கைப் படி, வரும் 2015 -16-ம் ஆண்டுக் குள், 3,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்காக அரசுக் கட்டிடங்களில் சூரியசக்தி அமைப்புகள் பொருத்துதல், வீடு களுக்கு மத்திய, மாநில அரசு களுடன் கூடிய மேற்கூரை சூரிய சக்தித் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

இதன்படி இதுவரை தமிழக மின் வாரிய தலைமை அலுவலகம், ஆவின் பால் குளிர்பதனீட்டு மையங் கள், 12 பிரபலமான கோயில்கள் மற்றும் பல்வேறு உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள், தெரு விளக்குகளுக்கு சூரியசக்தி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையுடன் இணைந்து இதற்கான திட்டப்பணிகள் தனியார் மூலம் மேற் கொள்ளப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வரு வாய்த் துறை அலுவலகங்கள், உள் ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் தலா 7 கிலோவாட் திறன் கொண்ட சூரியசக்தி அமைப் புகள் பொருத்தப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரிகள் கூறும்போது, “ஒரு கிலோவாட்டுக்கு தோராயமாக ஒரு லட்ச ரூபாய் வீதம், மொத்தம் 2,100 கிலோ வாட்டுக்கு, ரூ.21 கோடி தோராய திட்ட மதிப் பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசிடமிருந்து 30 சதவீத மானியம் கிடைக்கும். வரும் நவம் பரில் இத்திட்டப் பணிகளுக்கான தனியார் நிறுவனம், டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிகளைத் துவங்கி, மார்ச்சுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

இத்திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பஞ்சாயத்து அலுவலக சூரியசக்தி அமைப்பை மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப் பட்டுள்ளது. இத்திட்ட மின் நிலை யங்கள் மின் தொகுப்புடன் இணைக் கப்பட்டு அனைத்திலும் நவீன தொழில்நுட்பத்துடன் இரட்டைக் கணக்கீடு மீட்டர் பொருத்தவும், ஆன் லைன் மூலம் மின் உற்பத்தியை கணக்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x