Published : 30 Jun 2023 11:20 AM
Last Updated : 30 Jun 2023 11:20 AM

போக்குவரத்து சிக்னலின் டிஜிட்டல் போர்டில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்: வீடியோ பகிர்ந்த நெட்டிசன் - சீர் செய்த போலீஸார்

சிக்னலில் ஒளிர்ந்த ஜெய் ஸ்ரீராம் வாசகம்

சென்னை: சென்னை - திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலின் டிஜிட்டல் போர்டில் 'ஜெய் ஸ்ரீராம்' எனும் வாசம் ஒளிர்ந்துள்ளது. இதனை நெட்டிசன் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதன் பேரில் அதை சீர் செய்துள்ளனர் சென்னை போக்குவரத்து போலீஸார்.

சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு போலீஸார் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்கள். சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராதம் விதிப்பது, அது சார்ந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்வது என இயங்கி வருகின்றனர். இதற்கென பிரத்யேக கணக்கை நிர்வகித்து வருகின்றனர். சமயங்களில் மக்களும், போக்குவரத்து பிரிவு போலீஸாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்கை டேக் செய்து, அத்து மீறும் வாகன ஓட்டிகள் குறித்து ஆதாரத்துடன் தெரிவிப்பார்கள். அதன்பேரில் போலீஸார் நடவடிக்கை எடுப்பது வழக்கம்.

இந்த சூழலில் சென்னை - திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னலின் டிஜிட்டல் போர்டில் 'ஜெய் ஸ்ரீராம்' எனும் வாசம் ஒளிர்ந்துள்ளது. இதனை கவனித்த கிறிஸ் எனும் பெயரின் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள பயனர் ஒருவர், அதை அப்படியே வீடியோ எடுத்து, அதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு போலீஸாரின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்.

அவர் டேக் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை சரி செய்துவிட்டதாக படத்துடன் ட்விட்டரில் ரிப்ளை கொடுத்துள்ளனர் சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு போலீஸார். இது சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x