Published : 26 Jul 2014 10:58 AM
Last Updated : 26 Jul 2014 10:58 AM
தமிழகத்திற்கான ஹஜ் புனிதப் பயணத்தின் இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு இந்த ஆண்டு 13,159 விண்ணப்பங்கள் வந்துள்ளன. முஸ்லிம் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, இந்திய ஹஜ் கமிட்டி, 2014-ம் ஆண்டுக்கான ஹஜ் புனித பயணத்திற்கு 2672 இடங்களை ஒதுக்கியுள்ளது.
ஹஜ் 2014-க்கான வழிகாட்டுமுறைகளின் படி, 2672 இடங்களில் 1180 இடங்கள் ரிசர்வ் பிரிவு யாத்திரீகர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 1492 யாத்திரீகர்கள் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு வழங்க 100 இடங்கள் மட்டுமே கூடுதலாக இருக்கின்றன.
முந்தைய ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் இடங்களை தமிழ்நாட்டில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்காக இந்திய அரசு ஒதுக்கியிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.
எனவே, ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பங்கள் நடப்பாண்டில் அதிகரித்துள்ளதால் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூடுதலாக இடங்கள் ஒதுக்க வேண்டும்" இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT