Published : 22 Jul 2014 10:29 AM
Last Updated : 22 Jul 2014 10:29 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம்: டெல்டா பகுதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, கடையடைப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் திங்கள்கிழமை மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை யிடும் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர் 618 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சா வூர் மாவட்டத்தில் கடையடைப்பு நடை பெற்றது.

கர்நாடகம் காவிரியை வடிகால்களாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, தமிழ கத்துக்குரிய தண்ணீரை தர மறுத்து வருவதைக் கண்டித்தும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 7 ஆண்டுகளாகியும் காவிரி மேலாண்மை வாரியம், கண்காணிப்புக் குழுவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ஜூலை 21-ல் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், தஞ்சை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டமும் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

463 பேர் கைது

அதன்படி, திங்கள்கிழமை காலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை யில் உள்ள மத்திய கலால் அலுவல கத்தை முற்றுகையிட காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் ஊர்வல மாகச் சென்ற போராட்டக் குழுவினரை தடுக்க, 3 கட்டமாக தடுப்பரண்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்கள் அனைத்து தடுப்பரண்களையும் தள்ளிக் கொண்டு கலால் அலுவலகத்தில் நுழைய முயன்ற போது போலீஸாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தாவிக் குதித்து உள்ளே நுழைந்த சிலரை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெ.மணியரசன், மதிமுக மாநில துணைப் பொதுச்செயர் துரை.பாலகிருஷ்ணன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.நல்லதுரை, காங்கிரஸ் நிர்வாகிகள் து.கிருஷ்ணசாமி வாண்டையார், நாஞ்சி கி.வரதராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சுவாமிமலை விமலநாதன், கக்கரை சுகுமாறன், மணிமொழியன், பாரதிச்செல்வன், வணிகர் சங்கப் பேரவை நிர்வாகி கணேசன், பேரமைப்பு நிர்வாகி பாண்டியன், ஏஐடியுசி நிர்வாகி துரை.மதிவாணன், சிபிஐ(எம்எல்) நிர்வாகி அருணாசலம் உள்ளிட்ட 463 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடையடைப்பு

போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை நகரின் காமராஜர் மார்க்கெட், கீழ வாசல் மீன் சந்தை, பர்மா பஜார், தெற்கலங்கம், கீழ அலங்கம், தெற்கு வீதி, கீழ வீதி, காந்திஜி சாலை, ரயிலடி யில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. இதேபோல கும்ப கோணம், பாபநாசம், ராஜகிரி, பண்டார வாடை, அய்யம்பேட்டை, திருவை யாறு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கடைகள் அடைக்கப்பட்டன.

திருவாரூரில் 155 பேர் கைது

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தியாகு தலைமையில் நடைபெற்றது. மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஆலோசகர் கோ.திருநாவுக்கரசு, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொரு ளாளர் பாலகிருஷ்ணன், தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் ரா.ஜெயராமன், நகர்மன்ற உறுப்பினர் ஜி.வரதராஜன் உட்பட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில் 155 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக புதிய ரயில் நிலையத்திலிருந்து விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர்.

நாகை, திருச்சியில் 495 பேர்

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத் தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர், திருச்சி மாவட்டத்தில் 195 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x