Published : 25 Jun 2023 01:19 PM Last Updated : 25 Jun 2023 01:19 PM
கருணாநிதி நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயன்
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று 103 இடங்களில் நடைபெற்ற பன்னோக்கு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.88 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 103 இடங்களில் பன்னோக்கு மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் 1,88,885 பேர் பதிவு செய்து பல்வேறு சோதனைகள் செய்து கொண்டு உள்ளனர். இதன்விவரம்:
நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்த நோய் எனும் இரண்டு நோய்களுக்காக பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,15,048
நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 14,471
நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 4,056
ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 19,217
ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 5,576
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தநோய் உள்ளவர்கள் என்று பதிவு செய்து பரிசோதித்துக் கொண்டவர்கள் – 8,333
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் என்று இரண்டும் உள்ளவர்கள் என்று பரிசோதித்ததில் கண்டறியப்பட்டவர்கள் – 2,005
கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 7,849
கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதித்ததில் அறிகுறி உள்ளவர்கள் – 762
மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 8,712
மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையில் அறிகுறி உள்ளவர்கள் – 1,176
ரத்த சோகை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 44,165
பரிசோதனையில் இரத்த சோகை கண்டறியப்பட்டவர்கள் – 5,492
சிறுநீரக செயல்பாட்டினை கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,553
பரிசோதனையில் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டவர்கள் – 785
ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து கண்டறியும் பரிசோதனை மேற்கொண்டவர்கள் – 28,658
ரத்த பரிசோதனையில் இரத்த கொழுப்பு அதிகம் கண்டறியப்பட்டவர்கள் – 1,299
WRITE A COMMENT