Last Updated : 23 Jun, 2023 08:19 PM

 

Published : 23 Jun 2023 08:19 PM
Last Updated : 23 Jun 2023 08:19 PM

மக்களவைத் தேர்தல்: புதுச்சேரியில் பாஜக - காங்கிரஸ் மும்முரம்; திமுகவும் போட்டியிட ஆர்வம்

புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை நாடு முழுவதும் மாநில வாரியாக தொடங்கியுள்ளன.

மத்தியில் ஆளும் பாஜக மக்களவைத் தொகுதிகளை குறி வைத்து மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து, பணிகளை செய்து வருகிறது. மோடி அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் அனைத்துமாநிலங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ள அகில இந்திய பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் இத்தேர்தலை வலிமையாக எதிர்கொள்ளும் வகையில்மாநில கட்சிகளை ஒருங்கி ணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தேசியளவில் பிரபலமான தலை வர்கள் மெகா கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான பொறுப்பாளராக மத்திய அமைச்சர் முருகன்நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதம்ஒரு முறை புதுவைக்கு வந்து கட்சி நிர்வாகிகள், மக்களைச் சந்தித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து, புதுவையில்பாஜக சார்பில் சாதனை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின் றன. தொகுதி தோறும் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கத் தொடங்கியுள்ளனர். கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையே நடைபெற வில்லை. இருப்பினும் பாஜகவினர் புதுச்சேரியில் தேர்தல் பிரச் சாரத்தை தொடங்கி விட்டனர். மோடி படத்துடன் கூடிய தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சுவர் விளம்பரங்களும் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. நகரப் பகுதியில்ஆம்பூர் சாலை உள்ளிட்ட பகுதி களில் இந்தச் சுவர் விளம்பரங்களை பார்க்க முடிகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக - அதிமுக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஓரிடத்திலும் வெல்லவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கட்சிகள் ஆட்சியில் இடம் பெற்றுள்ளன. கூட்டணியில், புதுவை எம்பிதொகுதியை பெற்று போட்டியிடு வதில் இம்முறை பாஜகவினர் உறுதியாக உள்ளனர்.

இக்கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸை பொருத்த வரை ரங்கசாமி சொல்லும் சொல்லுக்கு மறுப்பேதுமில்லை. அவரிடம் தேர்தல் பற்றி கேட்டால் மவுனத்தை மட்டுமே பதிலாக தருகிறார். ஆனால் பாஜகவோ தாங்கள் போட்டியிட உள்ளதாக குறிப்பிடுவதுடன் பணிகளைவும் விரைவுப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இரு கட்சிகளில் எந்தக் கட்சி போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரியில் எழுந்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை திமுக கைப்பற்றியுள்ளது. இதனால் திமுக மக்கள வைத் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு உள்ளதால் புதுச்சேரியில் மக்கள வைத் தேர்தலில் போட்டியிட்டால் தங்களுக்கு அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வலு சேர்க்கும் என திமுக எண்ணுகிறது. இந்த விஷயத்தில் கடந்தஇரண்டு ஆண்டுகளாக அமைதிகாத்த காங்கிரஸ், கர்நாடகத் தேர்தல்வெற்றியால் புதுச்சேரியில் மாநிலத்தலைவராக எம்பி வைத்திலிங் கத்தை நியமித்துள்ளது. வரும் தேர்தலில் வைத்திலிங்கமே போட் டியிட வாய்ப்புள்ளதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

மாநிலத்தலைவர் பதவியேற்பு விழாவில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கண்டிப்பாக போட்டியிடும் என்பதை அக்கட்சி தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கட்சித் தலைவர்களும் புதுச்சேரியை கண்டிப்பாக தொகுதி பங்கீட்டில் பெறுவோம் என்ற கருத்தை உறுதிப்படுத்துகின்றனர்.

"கர்நாடகத்தைப் போல் வேறு பாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டால், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலிலும், அடுத்து வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறலாம்" என புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் கர்நாடக அமைச்சருமான தினேஷ்குண்டுராவும் அறிவுறுத்தி சென்றுள்ளார்.

கர்நாடக வெற்றி கொடுத்த உற்சாகத்தில் காங்கிரஸ் தரப்பும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கு மும்முரமாக போட்டியை உறுதி செய்து, தயாராகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x