Published : 12 Oct 2017 06:00 PM
Last Updated : 12 Oct 2017 06:00 PM
'நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்துக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் ஆனந்த் பாபு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னை தி.நகரில் தனது பெயரில் ஒரு தியேட்டர் வைத்திருந்தார். தற்போது அந்த இடத்தில் திருமண மண்டபம் இயங்கி வருகிறது. இந்நிலையில் டிரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திகில் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஐசக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில் படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன் அனுமதி பெறவில்லை. இந்தப் படம் வெளியானால் எங்களது குடும்பத்திற்கு உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.
மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி, விளம்பரத்திற்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கினால் இந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ''படத்தயாரிப்பு நிறுவனம் 'நாகேஷ் திரையரங்கம்' என்ற பெயரில்தான் படத்தை எடுத்துள்ளது. ஆனால், நாகேஷ் தியேட்டர் என்ற பெயரை அந்த நிறுவனம் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி நடிகர் ஆனந்த்பாபு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT