Published : 25 Oct 2017 12:35 PM
Last Updated : 25 Oct 2017 12:35 PM

பழநி கந்தசஷ்டி விழாவில் பங்கேற்க தயாராகும் 4 சூரன்கள்: பல தலைமுறைகளாக வடிவமைக்கும் குடும்பம்

பழநியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க 4 சூரன்களை தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

பழநியில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கிரிவீதிகளில் நடைபெறுகிறது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் 4 ரத வீதிகளிலும் நான்கு சூரன்களை சின்னக்குமாரர் வதம் செய்வார். இந்த நிகழ்ச்சிக்காக சூரன்கள் உருவம் கொண்ட பொம்மைகள் பழநி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் செய்யப்பட்டுவருகின்றன. இதை பாரம்பரியமாக செய்துவரும் குடும்பத்தினர் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சூரன்களை வடிவமைத்துவரும் சகோதரர்கள் ஆர்.செல்வராஜ், குமரேசன் கூறியதாவது:

3 தலைமுறைகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசஷ்டி சூரன்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். எந்த பணியிருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு சஷ்டி விழாவின்போது சூரன்கள் வடிவமைக்கும் பணியில் நான் எனது சகோதரர்கள் ஈடுபடுவோம். 4 கிரிவீதிகளில் 4 சூரன்களை சுவாமி வதம் செய்வதால் 4 சூரன்களையும் வெவ்வேறு முக அமைப்புகளில் செய்யவேண்டும்.

வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபான்சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் ஆகியோரை வடிவமைத்து கிரிவீதிகளில் நிற்க வைப்பதுவரை எங்கள் பொறுப்பு. இந்த பணியை ஆண்டுதோறும் திறம்பட செய்துவருகிறோம். இந்த பணியை எங்கள் தலைமுறைகளும் தொடரும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x