Published : 20 Jun 2023 05:38 PM Last Updated : 20 Jun 2023 05:38 PM
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
சென்னை: பிராட்வே பிரகாசம் சாலையில் 40 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் பிரகாசம் சாலையில் (பிராட்வே சாலை) என்.எஸ்.சி போஸ் சாலை சந்திப்பு முதல் தாதா முத்தியப்பன் தெரு சந்திப்பு வரையிலான பகுதி தற்காலிகமாக ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது. இதன்படி என்.எஸ்.சி போஸ் சாலையில் (பிராட்வே சந்திப்பு) இருந்து பிரகாசம் சாலை வழியாக ஸ்டான்லி ரவுண்டானா நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் 22.06.2023 முதல் 05.08.2023 வரை தடை செய்யப்படுகிறது. இது தொடர்பான விவரம்:
என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் எஸ்பிளனேடு சாலைகளில் வரும் வாகனங்கள் குறளகம் சந்திப்பு – என்.எஸ்.சி போஸ் சாலை – பாரீஸ் சந்திப்பு – இடது புறம் – இராஜாஜி சாலை - இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.
முத்துசாமி சாலையில் வரும் வாகனங்கள் முத்துசாமி சாலை – இராஜா அண்ணாமலை மன்றம் – வடக்கு கோட்டை பக்க சாலை – ரிசர்வ் வங்கி இணைப்பு சாலை – பாரீஸ் சந்திப்பு – இராஜாஜி சாலை – இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.
ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் பாரீஸ் சந்திப்பு – இராஜாஜி சாலை – இப்ராஹீம் சாலை வழியாக செல்லலாம்.
கொத்தவால்சாவடிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.
ஸ்டான்லி ரவுண்டானாவில் இருந்து பிரகாசம் சாலை - அண்ணா பிள்ளை தெரு வழியாக உள்ளே செல்லலாம்.
அண்ணா பிள்ளை தெரு - டேவிட்சன் தெரு – தாதா முத்தியப்பன் தெரு – பிரகாசம் சாலை வழியாக வெளியே செல்லலாம்.
WRITE A COMMENT