Published : 02 Jul 2014 09:24 AM
Last Updated : 02 Jul 2014 09:24 AM

திருக்கோவிலூர் அருகே நள்ளிரவில் ஃபிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

திருக்கோவிலூர் அருகே வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்து சிதறிய தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூர் அருகே விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்த வேல் (42). திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர் கொளப் பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார். திங்கட்கிழமை இரவு கந்தவேல் அவரது மனைவி சுகந்தி (38), தாயார் பார்வதி, மகள்கள் மாலதி (17), சிந்துஜா (12) ஆகியோர் ஏசி அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க் கிழமை அதிகாலை 2 மணி அள வில் சமையல் அறையில் இருந்த ஃபிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அனை வரையும் சுகந்தி எழுப்பி னார். உடனே, வீட்டின் வெளிக் கதவை திறந்து கொண்டு மாலதி வெளியேறினார். அவர் கூச்ச லிட்டதால் அக்கம்பக்கம் உள்ள வர்கள் வந்து ஏசி அறையில் இருந்த சிந்துஜாவை காப்பாற்றினார்கள்.

ஃபிரிட்ஜ் வெடித்ததால் அதிலி ருந்து குளோரோ ப்ளுரோ கார்பன் வாயு வீடு முழுவதும் பரவியது. இதனால், தூக்கக் கலக்கத்தில் இருந்த கந்தசாமி, சுகந்தி, பார்வதி ஆகியோர் திசை தெரியாமல் குளியல் அறை நோக்கி ஓடினர். அந்த சமயத்தில் வெப்பத்தில் மின் ஒயர்கள் எரிந்து கருகியதால் வீடு முழுவதும் புகை பரவி 3 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த திருக்கோவி லூர் டிஎஸ்பி ராஜேந்திரன் மற் றும் போலீஸார் வந்து கந்தவேல் உட் பட 3 பேரின் உடல்களை மீட்டு திருக் கோவிலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். விழுப்புரம் எஸ்பி மனோகரன் நேரில் சென்று விசாரணை மேற் கொண்டார். தடயவியல் நிபுணர் கள் வரவழைக்கப்பட்டு தடயங் கள் சேகரிக்கப்பட்டன. உயர் மின் அழுத்தம் காரணமாக ஸ்டெப் லைசர் வெடித்ததில் ஃபிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தை தடுக்க என்ன வழி?

வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டா? என்பது குறித்து ஃபிரிட்ஜ் மெக்கானிக் எம்.சரவணன் என்பவரிடம் கேட்டபோது, அவர் கூறியது:

வீடுகளில் தற்போது உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் அனைத்தும் பொதுவாக இரண்டு அடுக்குகளை கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டவை. இதில் ரெப்ரிஜிரேட்டர் என்பது நீரின் உறைநிலைக்கு மேல் (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது. நீரின் உறை நிலைக்கு கீழே (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது ப்ரீசர். முன்பெல் லாம் குளிருக்காக அமோனியா (anhydrous Ammonia) வாயு பயன்படுத்தப் பட்டது. இது விஷத்தன்மை கொண்டது என்பதால் சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றது என கருதப்பட்டதால் CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்படுகிறது.

குளிர்சாதன பெட்டியை காற்றோட்டமான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். சமையல் அறைகளில் அடுப்பு அருகில் வைத்தால் சிலிண்டரில் இருந்து கசியும் வாயு மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாகும் சிறு தீப்பொறி ஆகியவை சேர்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதுபோல, சூரிய ஓளி படும் இடத்தில் குளிர்சாதன பெட்டியை வைக்கக் கூடாது. பிரிட்ஜுக்கு நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும். ஃபிரிட்ஜ் வித்தியாசமான ஓசை வந்தால் மெக் கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x