Published : 20 Jun 2023 06:02 AM
Last Updated : 20 Jun 2023 06:02 AM

ராகுல் காந்தி பிறந்த நாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டையை அடுத்த சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகே கேக் வெட்டி கொண்டாடிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. உடன் முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி மற்றும் சு.திருநாவுக்கரசர் எம்.பி. கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ. உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று 53-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி, முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள். இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களைக் காப்பாற்ற நம் முன் நெடும்பயணம் காத்திருக்கிறது. இருவரும் இணைந்தே நடைபோடுவோம்.

விசிக தலைவர் திருமாவளவன்: ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். சனாதன ராஷ்டிரத்தை அமைக்கும் நோக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைச் சிதைக்கும் சாதிய, மதவாத, சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற்றிவாகை சூட வாழ்த்துகிறோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் துணை நிற்போம்.

மநீம தலைவர் கமலஹாசன்: எனது நண்பர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். துன்பங்களைப் புன்னகையுடன் எதிர்கொண்டு, வெறுப்புக்கு அன்புடன் பதிலளித்த நீங்கள், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளைப் பெற வாழ்த்துகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x