Published : 19 Jun 2023 11:48 AM
Last Updated : 19 Jun 2023 11:48 AM
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் 127 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாகவும் 6 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விமான நிலையத்தில் 16 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக சென்னையில், 127 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 6 மரங்கள் விழுந்துள்ளன. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து 158 புகார்கள் வந்துள்ளன. சென்னை மாநகராட்சி பராமரிக்கும் 22 சுரங்கப்பாதைகளில் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீரை வெளியேற்ற 593 பம்புகள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT