Published : 19 Jun 2023 11:27 AM
Last Updated : 19 Jun 2023 11:27 AM

மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

திருச்சி: திருச்சியில் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை. திருச்சி , திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள டெல்டா மாவட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்களாக முகாமிட்டுள்ளார்.

அதன்படி திருச்சிக்கு வருகை தந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த காலை உணவுத் திட்ட தயாரிக்கும் கூடத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் சரியாக இருக்கிறதா, மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். தொடர்ந்து மாணவ, மாணவியர்களிடம் உரையடினார்.

இந்த நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT   ( 4 Comments )
  • S
    Soopu sudalai

    Today photo shoot over....

  • N
    Naranana Swamy

    netru திரைபடனடிகர் விஜய் சொந்த செலவில் மாணவர்களுக்கு பாராட்டு பரிசளிப்பு விழா நடத்தி மணிக்கணக்கில் நேரத்தை செலவிட்டார். அதற்கு போட்டியாக பத்து நிமிஷமாவது உதயநிதி ஷோ நடத்த வே ண்டும். அரசு செலவில் விளம்பரம் எவ்வளவு எளிது. சொந்த காசில் மாணவமாணவிகளுக்கு பேணா பென்சில் கூட வாங்கித்தந்து இருக்க மாட்டார்.

      பிரபாகர்

      மோடி எவ்வளவு பேனா பென்சில் வாங்கி தந்திருக்கின்றார்?

      1

      0

      பிரபாகர்

      பேணா பென்சில் மோடி வாங்கி தந்திருக்கின்றாரா? படித்த படிப்பை வெளிப்படையாக சொல்ல முடியாத நபர்.... எதோ ஒரு இந்தி பெயரில் (பரிச்சேக்கே சாச்சா வா?) வருடம் ஒருமுறை எல்லா பள்ளி மாணவர்களையும் வற்புறுத்தி விளம்பரம் தேடும் நாட்டில்....

      1

      0

 
x
News Hub
Icon