Published : 18 Jun 2023 04:42 PM
Last Updated : 18 Jun 2023 04:42 PM

பராமரிப்பின்றி சேதமடையும் சிற்பங்கள் - உத்தமபாளையம் சமணர் மலை பாதுகாக்கப்படுமா?

உத்தமபாளையம்: உத்தமபாளையம் சமணர் மலை யில் பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் சிற்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையம் கோம்பை சாலை யில் அமைந்துள்ளது திருக் குணகிரி சமணர் மலை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமணர்கள் இங்குள்ள மலைப்படுக்கையில் வசித்தனர். இங்கு ஏராளமான புடைப்புச் சிற்பங்களையும் அவர் கள் வடிவமைத்துள்ளனர். இந்த மலையின் பல இடங்களிலும் மூலிகை அரைக்கப்பட்ட குழிகள், புடைப்புச் சிற்பங்கள், அணையா விளக்கு தூண், வட் டெழுத்து கல்வெட்டுகள், சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள், சுனை உள்ளிட்டவை காணப்படுகின்றன.

தற்போது இது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், எவ்வித பராமரிப்போ, கண்காணிப்போ இல்லை. இத னால் இந்த மலை பலவிதங் களிலும் சிதைந்து வருகிறது. திறந்தவெளியாக கிடக்கும் இந்த பாரம்பரிய பகுதியை பலரும் மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களுக்கே பயன் படுத்துகின்றனர்.

கண்ணாடி பாட்டில்களை உடைப்பதுடன், சிற்பங்களையும் சேதப்படுத்துகின்றனர். இன்னும் சிலர் தங்கள் பெயரையும், ஊரையும் செதுக்குகின்றனர். இதனால் பாரம்பரியமிக்க இந்த சமண சின்னங்கள் சிதைந்து வருகின்றன. மலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி களையும் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து “இந்து தமிழ் திசை” நாளிதழின் உங்கள் குரல் சேவையில் தொடர்புகொண்ட உத்தமபாளையத்தைச் சேர்ந்த சரவணபாபு கூறுகையில், அஹிம்சைக்கு உதாரணமானவர் களின் சிற்பங்களுக்கு அரு கிலேயே மது அருந்துவதோடு, இறைச்சிகளையும் சமைத்து உண் கின்றனர். சிற்பங்கள் சேதமடைந்து மோசமாக காணப் படுகின்றன. பாரம்பரிய நினைவுச் சின்னமான இந்த சமணர் படுக்கையை பராமரித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இது குறித்து தொல்லியல் துறையினரிடம் கேட்டபோது, உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் இவற்றை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக் கியவுடன் சீரமைத்து பராமரிக்கப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x