Published : 08 Jul 2014 11:42 AM
Last Updated : 08 Jul 2014 11:42 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து எதிரொலி: கட்டிடத்தின் தரம், பாதுகாப்பு பற்றிய விரிவான செயல்திட்டம் - சென்னையில் கிரெடாய் நிர்வாகிகள் பேட்டி

மவுலிவாக்கம் கட்டிட விபத்தைத் தொடர்ந்து, இதுபோன்ற விபத்து இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காக கட்டிடத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய புதிய, விரிவான சுய ஒழுங்குமுறை செயல்திட்டத்தை அகில இந்திய நில அபிவிருத்தி கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) தயாரித்து வருகிறது.

இதுகுறித்து கிரெடாய் தமிழ்நாடு தலைவர் ஆர்.குமார், சென்னை அமைப்பின் தலைவர் அஜித் சோர்டியா, துணைத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சென்னையில் திங்கள் கிழமை கூறியதாவது:

சென்னை அருகே மவுலிவாக் கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்துக்குப் பிறகு அகில இந்திய நில அபிவிருத்தி கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன் படி, ஐ.ஐ.டி. முன்னாள் பேராசிரியர் சாந்தகுமார், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் கே.பி. ஜெயா, பெங்களூர் ஐ.ஐ.எஸ்சி. பேராசிரி யர் தரன், மண் பரிசோதனை நிபுணர் கே.எல்.புஜார், கிரெடா யைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமார், ஆர்.ஜெய்குமார், என்.நந்தகுமார், சுரேஷ்கிருஷ்ணன் ஆகிய 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு, மவுலிவாக்கத்தில் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, இனிமேல் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்பதுடன் கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், தர உத்தரவாதம் ஆகியவை குறித்தும் விரிவான அறிக்கையை தயாரித்து வருகிறது. இந்த அறிக்கை புத்தகமாக தயாரிக்கப் படும். கட்டிட விபத்து நடந்தால் அதற்கு யார்? யார்? பொறுப்பு என்ற விவரங்களும் இதில் இடம்பெறும். கிரெடாய் உறுப்பினர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்படுவதுடன், கிரெடாய் அமைப்பில் இல்லாத வர்களும் விவரம் தெரிந்து கொள்வதற்காக பயிலரங்குகள் நடத்தப்படும்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்துக் கும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கும் (சி.எம்.டி.ஏ.) எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால், எத்தனை மாடி கட்டிடம், எவ்வளவு உயரத்தில் கட்டப்படுகிறதோ அதற்கேற்ப அதைச்சுற்றி எவ்வளவு இடம் இருக்க வேண்டும் என்பது உள் ளிட்ட நிபந்தனைகளை சி.எம்.டி.ஏ. விதிக்கும். ஆனால், கட்டிடத்தில் எத்தனை தூண்கள் அமைக்க வேண்டும், அதன் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றிற்கு கட்டிட பொறியாளரும், கட்டுனரும்தான் பொறுப்பு.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு முன்பு 10 மீட்டர் ஆழத்துக்கு துளை போட்டு அந்த இடத்தில் எந்த மாதிரியான மண் இருக்கிறது என் பதை முதலில் கண்டறிய வேண் டும். கட்டிடம் கட்டப்படும் பகுதி பல ஏக்கராக இருந்தால் மேலும் சில இடங்களில் மண் ஆய்வு செய்ய வேண்டும். ஏரி, குளத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என்ப தில்லை. கடலிலே கூட கட்டிடம் கட்டுகிறார்கள். எந்த இடத்தில் கட் டினாலும் மண் ஆய்வு அவசியம்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடம், பட்டா நிலம் என் கிறார்கள். ஏரியாக இருந்திருந்தால் பட்டா கொடுத்திருக்க மாட்டார்கள். விபத்து நடந்த பகுதியில் அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு நபர் விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பு சார்பில் 8 பேர் கொண்ட குழு மேற்சொன்ன ஆய்வு அறிக் கையை 10 நாட்களில் தயாரித்து விடும். பின்னர் அந்த அறிக்கை ஒரு நபர் கமிஷனிடம் அளிக்கப்படும்.

கட்டிடம் கட்டுவதற்கான நிபந் தனைகள், விதிமுறைகள் தற்போது போதுமான அளவுக்கு உள்ளன. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அவற்றை பின்பற்றினாலே போதும்.

ஏற்கெனவே கட்டிடம் கட்டியவர்கள் தங்களது கட்டிடம் திட்ட அனுமதியின்படிதான் கட்டப் பட்டுள்ளதா என சோதித்து அறிந்து கொள்ளலாம். அதில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருந்தால், அதை சரிசெய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x