Published : 16 Jun 2023 06:05 AM
Last Updated : 16 Jun 2023 06:05 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கெனவே நிறைவடைந்திருந்தன.
திமுக கூட்டணியைச் சேர்ந்த 12 பேர் காஞ்சியில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் 8 பேரும், நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் 4 பேரும் இந்த திட்டக் குழுவில் தேர்வு செய்யப்பட இருந்தனர். இவர்கள் 12 பேரை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் 12 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
ஊரக பகுதிக்கு நித்யா சுகுமார், ப.ராமமூர்த்தி, பாலா என்கிற பால்ராஜ், நந்தம்பாக்கம் வே.அரி, அமுதா செல்வம், பொற்கொடி செல்வராஜ், பா.பத்மா பாபு, கோ.சிவராமன் ஆகியோரும், நகர்ப்புற பகுதிக்கு கு.சுப்புராயன், ந.கருணாநிதி, து.பெருமாள் ராஜ், கி.தனசேகரன் ஆகியோரும் திட்டக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதே போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதிக்கும், நகர்ப்புற பகுதிக்கு தலா 6 பேர் போட்டியிட்டனர். இதில் ஊரக பகுதிக்கு போட்டியிட்ட க.இரமேஷ், மு.குணசேகரன், வி.பூங்கோதை, செ.மாலதி, தா.ஜெயச்சந்திரன், ம.ஜெயலட்சுமி ஆகிய 6 பேரும், அதேபோல் நகரப்புற பகுதிக்கு கோ.சந்தோஷ் கண்ணன், பெருங்களத்தூர் சி.சேகர், சு.துர்கா தேவி, இரா. நரேஷ் கண்ணா, ரா.பரணி, து.மூர்த்தி போட்டியின்றி தேர்வாகினர்.
திமுக சார்பில் போட்டியிட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களான ச.விஜயகுமாரி, ஜி.சுதாகர், ச.ராமஜெயம், தே.அருண்ராம், ச.சரஸ்வதி, ஜி. இந்திரா, எம்.சதீஷ்குமார், ஏ.ஜி. ரவி, ஆவடி மாநாகராட்சி வார்டு உறுப்பினர் தா.ஷீலா, திருத்தணி நகராட்சி உறுப்பினர் டி.எஸ்.ஷியாம் சுந்தர், ஊத்துக்கோட்டை, நாரவாரிகுப்பம் பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்களான கு.அபிராமி, க.தெய்வாணை கபிலன் ஆகிய 12 பேரும் திருவள்ளூர் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT