Published : 16 Jun 2023 06:46 AM
Last Updated : 16 Jun 2023 06:46 AM
சென்னை: மாநகராட்சியின் மணலி மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர் பகுதியில் ரூ.29 லட்சத்து 86 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா திறந்து வைத்தார்.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17-வது வார்டுக்கு உட்பட்ட அரியலூர் பகுதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் 784 சதுர அடி பரப்பளவில் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. 2 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை மேயர் பிரியா நேற்று திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, வகுப்பறைசெயல்பாடுகளைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், துணை மேயர் மு.மகேஷ்குமார், சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.அமிர்தஜோதி, மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன், நிலைக்குழுத் தலைவர் (கல்வி) த.விசுவநாதன், மண்டலக் குழுத் தலைவர்கள் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT