Published : 02 Jul 2014 09:40 AM
Last Updated : 02 Jul 2014 09:40 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கவனம் செலுத்த மாவட்ட கல்வித் துறை முடிவு எடுத்துள்ளது.
தற்போது திருவள்ளூர் மாவட் டத்தில் அரசுப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 1,624. இவற்றில் 106 மேல்நிலைப் பள்ளிகளும் 157 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
கடந்த கல்வியாண்டில் திருவள் ளூர் மாவட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய 20,380 பேரில், 16,370 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் (இதன் சதவீதம் 80.32). அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 29,719 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களில் 24,744 பேர் (இதன் சதவீதம் 80.32) தேர்ச்சியடைந்துள்ளனர்.
எனவே, அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை இன்னும் அதிகரிக்க ஒவ்வொரு பள்ளியிலும் சிறப்பு கவனம் செலுத்த மாவட்ட கல்வித் துறை முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
அரசு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10-ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முந்தைய சில மாதங்களில் சிறப்புப் பயிற்சி, மாதிரி தேர்வுகள் நடத்துவர். அதன் பலனாக, ஆண்டுதோறும் அரசு பொதுத் தேர்வுகளில் திருவள்ளூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நடப்பு கல்வியாண்டின் தொடக் கத்தில் இருந்தே ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை கண்காணித்து, அரசு பொதுத்தேர்வில் கூடுதல் மதிப் பெண்களுடன் அதிக தேர்ச்சியினை மாணவர்கள் பெறுவதற்கு உரிய பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.
அரசுப் பள்ளிகளின் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசின் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவர் கள் என அனைத்து நிலை மாணவர் களும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் குறித்து, ஆசிரியர்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்கள் அடுத்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உரிய பயிற்சிகள் அளிக்க இருக்கிறோம்.
இப்படி அனைத்து வகுப்பு மாணவர்களின் கல்வித் தரத்தை, கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்தே கண்காணித்து, உரிய பயிற்சிகள் அளிப்பதால் அரசு பொதுத் தேர்வுகளில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT