Published : 15 Jun 2023 05:20 AM
Last Updated : 15 Jun 2023 05:20 AM

மதிமுக 29-வது பொதுக்குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில். புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் வைகோ, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். படம்: ம.பிரபு

சென்னை: மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுகவின் 29-வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளராக 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ, அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோர் மற்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், தணிக்கைகுழு உறுப்பினர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிமுக 30-வது ஆண்டு தொடக்க விழாவை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கொடியேற்று விழாக்களை ஏற்பாடு செய்து மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி மதிமுக சார்பில் மக்களிடையே தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். மேகேதாட்டு வழக்கை தமிழகஅரசு விரைவுபடுத்த வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலை இயங்கினால்1996-ல் நடைபெற்ற போராட்டங்களை விட இரண்டு மடங்கு உத்வேகத்துடன் மக்களைத் திரட்டி மதிமுக போராடும் என்பன உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, ‘‘கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வான 1,556 பேரில் 1,552 பங்கேற்றனர். கட்சி வரலாற்றிலேயே இவ்வளவு பொதுக்குழுஉறுப்பினர்கள் பங்கேற்றது இதுவே முதல்முறை. கட்சி வலிவும் பொலிவும் பெற்று திகழ்கிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x