Published : 15 Jun 2023 04:00 AM
Last Updated : 15 Jun 2023 04:00 AM

நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுக முயற்சி - கலக்கத்தில் அதிமுகவினர்

நத்தம்: அதிமுக வசமுள்ள நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற திமுக வினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில், ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுக 9 ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், குஜிலியம்பாறை ஆகிய 5 ஒன்றியத் தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்ததை யடுத்து அதிமுக வசம் உள்ள ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுகவினர் முயற்சி மேற்கொண்டனர்.

இதில் அமைச்சர் அர.சக்கர பாணியின் மேற்கு மாவட் டத்துக்கு உட்பட்ட வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றியங்களில் அடுத்தடுத்து முயற்சி மேற்கொண்டு வெற்றியும் பெற்றனர். வேடசந்தூர், குஜிலியம் பாறை ஒன்றியங்களைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் திமுகவினர் கொண்டு வந்ததன் மூலம் அதிமுக ஒன்றியத் தலைவர்கள் பெரும்பான்மையை இழந்தனர்.

இதனால் அடுத்தடுத்து வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றிய தலைவர்களாக இருந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவி இழந்தனர். பின்னர் தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்தவர்கள் வேடசந்தூர், குஜிலியம்பாறை ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றினர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றி யங்களில் 11 திமுக வசம் சென்றது.

தற்போது வடமதுரை, நத்தம், நிலக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் மட்டும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய தலைவர்களாக உள்ளனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற திமுக களம் இறங்கியுள்ளது அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் ஒன்றிய தலைவராக நத்தம் ஆர்.விசுவநாதனின் மைத்துனர் ஆர்.வி.என்.கண்ணன் உள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் நத்தம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில் அதிமுக-15, திமுக-5 என வென்றது. இதனால் அதிமுக ஒன்றியத் தலைவர் பதவியை கைப்பற்றியது. தற்போது நத்தம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் திமுகவின் பலம் 10 ஆக உயர்ந்து அதிமுகவின் பலம் 15-ல் இருந்து 10 ஆகவும் குறைந்தது.

தற்போது சரிசமமாக இரு தரப்பிலும் கவுன்சிலர்கள் உள்ளர். மேலும் சில கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்தால் அதிமுக ஒன்றியத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து தலைவர் பதவியைக் கைப்பற்றிவிடலாம் என திமுகவினர் வியூகம் அமைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர். இதனால் அதிமுகவினர் கலக்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x