Published : 05 Apr 2014 10:02 AM
Last Updated : 05 Apr 2014 10:02 AM

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: வடசென்னையில் மதிமுக பொதுச் செயலர் வைகோ பேச்சு

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

சென்னையிலுள்ள 3 நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்தரராஜனை ஆதரித்து முத்தமிழ்நகர் மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது வைகோ பேசியதாவது:

நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதி. இத்தேர்தலில் பாஜக கூட்டணி 323 தொகுதிக்கு மேல் கைப்பற்றும். கடந்த 5 ஆண்டு காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தியது மட்டுமல்லாமல், சமையல் காஸ் விலையையும் மத்திய அரசு ஏற்றியுள்ளது. இதனால் ஏழை மக்கள் குடும்ப வருமானத்தை தியாகம் செய்ய வேண்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு பிரச் சினை, இலங்கை பிரச்சினை, மீனவர்களுக்கு பாதிப்பு என பல் வேறு கொடுமைகளுக்கு இந்திய அரசுதான் காரணமாக இருந்துள் ளது. எனவே, தமிழக மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது.

அந்த கட்சியுடன் ஒட்டி உறவா டிய திமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது திமுக உடந்தையாக இருந்தது. இந்த தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அறவே இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x