Last Updated : 21 Oct, 2017 11:54 AM

 

Published : 21 Oct 2017 11:54 AM
Last Updated : 21 Oct 2017 11:54 AM

ஞாயிறு அன்று ஸ்ரீகெளரி விரதம்: அம்பாளை வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும்!

உலகுக்கே தாயானவள் பராசக்தி. அவளை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள். தீபாவளி முடிந்து, மறுநாள் கேதார கெளரி நோன்பையும் கடைப்பிடித்து, கருணையே உருவெனக் கொண்ட அன்னையை வணங்கியிருப்போம்.

ஐப்பசி ஞாயிறான நாளைய தினம் 22.10.17 ஸ்ரீகெளரி விரதம். அம்பாளுக்கு உரிய நன்னாள். மகாசக்திக்கு உண்டான அற்புத தினம். இந்த நன்னாளில், வீட்டில் பூஜையறையில் உள்ள அம்பாள் படங்களுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

இந்தநாளில், லலிதா சகஸ்ர நாம பாராயணம் செய்து, ஏழ்மை நிலையில் உள்ள சுமங்கலிகளை நமஸ்கரித்து, தம்மால் இயன்ற மங்கலப் பொருட்களை வழங்கினால், மாங்கல்ய பலம் பெருகும். இல்லத்திலும் சுபிட்சத்திலும் நிலவும் என்பது ஐதீகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x