Published : 12 Jun 2023 04:33 PM
Last Updated : 12 Jun 2023 04:33 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களில் வளர்ந் துள்ள செடிகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம், கிளி கோபுரம் உட்பட 9 கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொரு கோபுரத்துக்கும் தனித்தனி வரலாறு உள்ளது. கோயிலில் தல விருட்சமான மகிழ மரம் அருகே நின்று 9 கோபுரங்களையும் தரிசிக்கலாம்.
அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில், கூட்டம் அதிகளவில் இருக்கும்போது, மூலவரை தரிசிக்க முடியாத பக்தர்கள், ராஜகோபுரம் உட்பட 4 திசைகளில் உள்ள கோபுரங்களை தரிசிக்கின்றனர். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பர். இத்தகைய சிறப்பு மிக்க கோபுரங்களை தொடர்ச்சியாக பராமரிக்க தவறியதால் செடிகள் வளர்ந்து மரமாக உருவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.
செடிகள் மரமாக வளரும்போது, கோபுரத்தின் உறுதித் தன்மைக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஒவ்வொரு கோபுரத்திலும் செடிகள் மற்றும் வளர்ந்து வரும் மரங்களை எளிதாக காணலாம். பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கலை நயத்துடன் அமைக்கப் பட்டுள்ள கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைய வாய்ப்புகள் உள்ளன என பக்தர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறும்போது, “உலக பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரங்கள் சிறப்புமிக்கது. ஒவ்வொரு கோபுரத்துக்கும் வரலாறு உள்ளது. கோபுரங்களை எழுப்பு வதற்கு பலரும் தங்களது உழைப்பை அர்ப்பணித்துள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க கோபுரங்களை பராமரித்து பாதுகாக்க வேண்டியது இந்து சமய அறநிலையத் துறையின் கடமையாகும்.
கோபுரங் களை ஒவ்வொரு மாதமும் பராமரித்து வந்தால், செடிகள், புற்கள், மரங்கள் வளருவதை தடுக்க முடியும். தடுக்கா விட்டால், கோபுரத்தின் உறுதித்தன்மை பாதிக் கப்படும். எனவே, கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT