Published : 07 Oct 2017 05:53 PM
Last Updated : 07 Oct 2017 05:53 PM
தமிழகம் முழுதும் தியேட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இது பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்றும் செயல் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
தியேட்டர் கட்டணம், கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது குறித்து நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வரும் சமூக ஆர்வலர் தேவராஜ் 'தி இந்து' தமிழுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:
தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இதில் ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி எப்படி சேர்க்கப்பட்டுள்ளது?
தியேட்டர் கட்டண உயர்வு பொதுமக்கள் மீது மீண்டும் விழும் ஒரு அடிதான். ஏற்கெனவே தியேட்டர் கட்டணம் பல மடங்கு உள்ளது என்று கூறி வருகிறோம் தற்போது அரசு அறிவித்துள்ள கட்டண உயர்வால் ஒரு டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ.200 க்கும் அதிகமாக அரசின் அங்கீகாரத்துடன் விற்பனை ஆகும்.
தற்போது விலை உயர்வு பற்றி தெளிவான அறிவிப்பை அரசு அறிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி வரி, கேளிக்கைவரி இதற்குள்ளே அடக்கமா? அல்லது தனியாகவா என்பது பற்றி தெளிவான விளக்கம் இல்லை.
ஏற்கெனவே இது பற்றி நான் ஆர்.டி.ஐயில் விளக்கம் கேட்டு போட்டதற்கு டிக்கெட் விலையுடன் ஜி.எஸ்.டி வரி உட்பட்டா , தனியாக இணைக்கப்படுமா என்று தெளிவாக பதில் கூறாமல் இந்தி ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழியில் கேள்வி கேளுங்கள் என்று பதிலளித்தார்கள். இதுவா பதில்.
தற்போது வந்துள்ள விலை உயர்வால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம்தான். கூடுதலாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி, கேளிக்கை வரிகளை மக்கள் தலையில்தான் ஏற்றப்போகிறார்கள்.
தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் 10% கேளிக்கை வரியை எதிர்த்துப் போராடினார்கள். தற்போது விலை ஏற்றம் அவர்களுக்கு லாபமா?
விலை ஏற்றம் என்றால் அவர்கள் எதிர்த்து போராடிய வரிகளுக்கு எதிராகத்தானே, அதற்காகத்தான் விலையை ஏற்றி கொடுத்துவிட்டார்களே. ஆனால் இவர்கள் அதற்கு மேலும் இவர்கள் கட்டக்கூடிய வரியையும் சேர்த்து மக்கள் தலையில் தான் கட்டுகிறார்கள்.
தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகிறார்களே?
தியேட்டர்கள் நஷ்டத்தில் இயங்குவது என்றால் இவர்கள் பராமரிப்பு, லாபம் போக லாபத்தில் வரும் குறைந்தப்பட்ச நஷ்டத்தை சொல்கிறார்கள்.
ஒரு புதிய படம் வந்தால் சாதாரண நடிகர்கள் என்றால் பர்சன்டேஜ் அடிப்படையில் லாபம் பார்க்கிறார்கள். 40% வரை இவர்கள் வருமானத்தில் பர்சன்டேஜ் வாங்குகிறார்கள். பிரபல நடிகர்கள் என்றால் தனி பட்டியல் ஒன்று உள்ளது அதற்கு இவர்கள் அரசு வைக்கும் விலையை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
தாங்கள் நிர்ணயிக்கும் தொகையை மொத்த தொகையாக வைத்து டிக்கெட்டுகளை விற்கிறார்கள். அதை எந்த அதிகாரியும் கண்டுகொள்வதில்லை.
அதிகபட்சமாக விற்கிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?
இது சம்பந்தமாக நான் வழக்கே போட்டுள்ளேன். பல பிரபல நடிகர்களின் படங்கள் வெளியான போது டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் விற்றது குறித்து வழக்கு போட்டு அவையெல்லாம் நிலுவையில் இருக்கிறது.
இரண்டு முக்கிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் தொகைக்கு விற்கக் கூடாது என்று உயர் நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவே போட்டார் நீதிபதி. ஆனால் அதை தியேட்டர் உரிமையாளர்களும், தயாரிப்பாளர்களும் மதிக்கவே இல்லை.
இது போன்ற விஷயங்களில் பாதிக்கப்படுவது மக்கள்தான். தற்போதைய விலை ஏற்றமும் அரசு தெளிவாக அறிவிக்காத நிலையில் அனைத்து விலையேற்றமும், வரியும் மக்கள் தலையில் தான் விழும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT