Published : 11 Jun 2023 06:12 AM
Last Updated : 11 Jun 2023 06:12 AM
சென்னை: மக்களவை தேர்தல் 2024-ல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மையினர் அணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹாமர் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மையினர் அணி மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. சிறுபான்மையினர் அணிதலைவர் அஸ்லாம் பாட்ஷாதலைமையில் நடைபெற்ற கூட்டத்தின், அகில இந்திய காங்கிரஸ் சிறுபான்மையினர் அணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் ஹாமர்இஸ்லாம் பங்கேற்று உரையாற்றி னார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி முயற்சியால் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். கர்நாடக மாநில தேர்தலில் பாஜக தோற்றிருப்பதுதான் அதற்கு முன்னுதாரணம்’’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவின் தலைவர் அஸ்லாம் பாஷா, ‘‘மத்திய பாஜக அரசு மக்கள் உயிரைவிட மாடுகளின் உயிரை காப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. மனித உயிர்கள் அவர்களுக்கு பெரிதாகதெரியவில்லை. கடந்த காலங்களில் ஏற்பட்ட ரயில் விபத்துகளின்போது லால் பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்கள் தங்களதுபதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் இவ்வளவு பெரியரயில் விபத்து நடந்தும் அத்துறையின் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் உள்ளார். பாஜகவினர் பதவி வெறி பிடித்தவர்கள் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது’’ என்றார்.
இக்கூட்டத்தில் சிறுபான்மை பிரிவின் மாநில துணைத் தலைவர்ஸ்டீபன், பிரின்ஸ் தேவசகாயம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT