Last Updated : 21 Oct, 2017 11:12 AM

 

Published : 21 Oct 2017 11:12 AM
Last Updated : 21 Oct 2017 11:12 AM

திருக்குறளை போதித்து மாணவர்களை ஊக்குவிக்கும் 85 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர்

கரூர் ராஜாதி வீதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கே.கணேசன் (85). இவர், தனது ஓய்வு காலத்தை பயனுள்ளதாக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று திருக்குறள் மற்றும் மகாத்மா காந்தி குறித்து மாணவர்கள் மத்தியில் பேசி ஊக்கப்படுத்தி வருகிறார்.

இதற்காக எந்த விதமான அன்பளிப்பும் பெறாமல் கடந்த 15 ஆண்டுகளாக இப்பணியை மேற்கொண்டு வருகிறார். 85 வயதிலும் திருக்குறளின் 133 அதிகாரத்தில் உள்ள 1,330 குறளையும் மனப்பாடமாக வைத்துள்ளார். குறளை சொன்னால் அந்த குறள் எந்த அதிகாரம், எத்தனையாவது குறள் எனக் கூறுவதோடு அதற்குரிய விளக்கத்தையும் கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் திருக்குறள் கே.கணேசன் கூறியதாவது:

நான் வரலாற்று பாட ஆசிரியர். ஓய்வுபெற்று 27 ஆண்டுகளாகிறது. இதில், கடந்த 15 ஆண்டுகளாக மாணவர்களுக்கு திருக்குறள் போதித்து வருகிறேன். கரூர், திருச்சி, திண்டுக்கல், கோவை என பல மாவட்டங்களில் இதுவரை 3 ஆயிரம் பள்ளிகளில் திருக்குறளின் மகத்துவத்தைப் பற்றியும், அதன் பொருள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறி வருகிறேன். நாமக்கல், கரூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளிலும் பேசியுள்ளேன்.

திருக்குறளுடன், மகாத்மா காந்தியை ஒப்பிட்டும் அவரது சேவையையும் கூறி வருகிறேன்,என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x