Published : 03 Apr 2014 11:41 AM
Last Updated : 03 Apr 2014 11:41 AM
கடலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக, கூட்டணிக் கட்சியான விடு தலைச் சிறுத்தைகளை அரவ ணைத்துச் செல்லாமல் இருப்பதால் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர்.
கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் கே.நந்தகோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர மாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்காக திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பம்பரமாகச் சுழன்று களப்பணி செய்துவருகிறார்கள். திமுக-வினரின் தேர்தல் பிரச்சாரங்களில் முஸ்லிம் லீக் கட்சியினர் மட் டுமே அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள். இன்னொரு பிரதானக் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பட்டும்படாமலேயே இருக்கிறார்கள்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, ’’எங்களை திமுக- வினர் பயன்படுத்திக் கொள்ளத் தவறுகின்றனர். இது ஏன் என்பது புரியவில்லை. கடலூரில் எங்கள் தலைவர் தொல். திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஆனால், திமுக தரப்பிலிருந்து இதுவரை பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தவில்லை. அதிமுக-வினர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். இவர்கள் இதுவரை எதிலும் ஆர்வம் காட்டவில்லை’’ என்றார்.
திமுக-வினரோ, அவர்களை அழைத்துக் கொண்டு சென்றால் கிராமப்புறங்களில் கிடைக்கக் கூடிய கொஞ்ச நஞ்ச ஓட்டுகளும் கிடைக்காமல் போய்விடும். அக்கட்சியின் மாவட்ட முக்கியப் பிரமுகர் மீது மாவட்டம் முழுக்க அதிருப்தி நிலவுவதே இதற்குக் காரணம். மேலும், அவர்கள் எதையோ எதிர்பார்த்தே வருகிறார்களே தவிர, களப்பணிக்காக வருவதாகத் தெரியவில்லை. அதனால்தான், அவர்களாகவே வந்தால் வரட்டும் என்ற மனப்பான்மையில் நாங்களும் செயல்படுகிறோம்’’ என்றார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT